Auschwitz சித்திரவதை முகாமிற்கு விஜயம் செய்த கனடிய பிரதமர்.
AUSCHWITZ, Poland –சகிப்புத்தன்மையற்ற நிலைக்கு எதிராக எச்சரிக்கை செய்யவும் அன்பை வழங்கும் பொருட்டும் மனித வரலாற்று அத்தியாயங்களில் ஓரு கொடிய அத்தியாயமாக விளங்கும் போலந்தில் உள்ள Auschwitz-Birkenau சித்திரவரை முகாமிற்கு ஜஸ்ரின் ட்ரூடோ ஞாயிற்றுக்கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
நீல வானமும் சூரிய ஒளியும் மிகுந்த ஞாயிற்றுகிழமை வரலாற்றில் முற்றிலும் மாறுபட்ட இடம் ஒன்றிற்கு முட்கம்பி வேலிகளையும் விஷவாயு அறைகளையும் கடந்து நடந்து சென்றார்.
இப்பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது மில்லியன்களிற்கும் மேலான மக்கள்–பெரும்பாலானவர்கள் யூதர்கள்–கொன்று குவிக்கப்பட்ட இடமாகும்.
விஜயத்தின் பெரும்பாலன நேரம் ட்ரூடோ உணர்ச்சியற்ற முகத்துடன் காணப்பட்டார். முகாமில் இருந்து தப்பியவர்களில் ஒருவரும் 88-வயதுடையவருமான Nate Leipciger என்வர் பிரதமரை வழிநடத்தினார்.இவர் தற்சமயம் ரொறொன்ரோவில் வசிக்கின்றார்.ஆனால் பாழடைந்த நிலையில் காணப்பட்ட விஷவாயு அறைகளை கடந்து செல்கையில் கண்ணில் இருந்து வடிந்த கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. 70வருடங்களிற்கு முன்னர் Leipciger-ன் தாய் மற்றும் சகோதரியும் எரிவாயு அறைக்குள் கொல்லப்பட்டனர்.
கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் முகாமிற்கூடாக நடந்து செல்கையில் பிரதம மந்திரி அதிகம் பேசவில்லை. ஆனால் Auschwitz-Birkenau State மியூசியத்தில் இருந்த விருந்தினர் புத்தகத்தில் செய்தி ஒன்றை விட்டார்.
சகிப்புத்தன்மை போதுமானதாக இல்லை. மனித நேயம் அன்பு காட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.என்பதே செய்தியாகும்.
Auschwitz-Birkenau முகாமிற்கு Jean Chretien மற்றும் Stephen Harper ஆகியோரை தொடர்ந்து விஜயம் மேற்கொண்ட பிரதமர் ட்ரூடோவாவார்.
வார்சோவில் இடம்பெற்ற NATO உச்சி மகாநாட்டிற்கும் உக்ரெயின் பயணத்திற்கும் இடையில் முகாம் விஜயம் இடம்பெற்றது.
Leipciger முகாமில் தனது அனுபவங்களை நினைவு கூர்ந்த போது தனது வலிகளை வெளியில் காட்டிக்கொள்ளாது இருந்தார்.1943ல் Leipcige இளம் வாலிபனாக இருந்த சமயம் முகாமிற்கு சென்றார்.ஒரு இடத்தில் நின்ற போது இருண்ட அறை ஒன்றில் முடி மேடு காணப்பட்டது. பெண்களும் இளம் பெண்களும் இந்த அறையில் அடைக்கப்பட்டு நாசிகளால் கொல்லப்பட்டனர்.
இவ்விடத்தை கண்டதும் தனக்கு மிக கஷ்டமாக இருக்கின்றதென Leipcige பிரதமரிடம் தெரிவித்தார்.தனது தாய் மற்றும் சதோரி இந்த அறைக்குள் அடைக்கப்பட்டிருக்கலாம் என கூறினார்.
பல இடங்களில் ட்ரூடோ வெளிப்படையாக பாதிக்கப்பட்டார். நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகளை நாசிகள் கொன்று குவித்த சிறை சுவர் ஒன்றில் கனடா சார்பில் பிரதமர் மலர் வளையம் ஒன்றை வைத்தார். பின்னர் மௌன அஞ்சலியும் செலுத்தினார்.
அதிர்ச்சியுடன் விஷ வாயு அறை ஒன்றை கடந்து செல்கையில் சிமென்ட் சுவர்களில் விரல் நகங்கள் துளைத்த அடையாளங்கள் காணப்பட்டன. ஆற்றொணா நிலையில் இருந்த சிறைக் கைதிகள் இறக்க முன்னர் தப்பியோட முயன்ற சமயம் ஏற்பட்ட அடையாளங்களாக இருக்கலாம்.
இந்த இடத்தில் ரிசு ஒன்றை எடுத்து கண்ணீரை துடைக்க வேண்டிய நிலை பிரதமருக்கு ஏற்பட்டது.
வெளிவிவகார அமைச்சர் Stephane Dion சர்வதேச வர்த்தக அமைச்சர் கிறிஸ்ரியா விறீலான்ட் ஆகியவர்கள் பிரதம மந்திரியுன் கூட இருந்தனர்.
படுகொலைகளில் தப்பி பிழைத்தவர்ளை கவனிப்பதை நாம் கட்டாயம் தொடர வேண்டும் எனவும் யூத எதிர்ப்புக்கெதிராகவும் பகைமையின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் நம்முடைய காலத்தில் இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
246 total views, 246 views today
– See more at: http://www.canadamirror.com/canada/65602.html#sthash.55lZiVwV.dpuf