தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அமீர் அவர்கள், பருத்திவீரன் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றவர். அத்துடன் ஈழம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் இவரது படம் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் அமீர் ஒரு ஊடகத்திற்குக் கருத்துத் தெரிவிக்கையில், “எமது நாட்டு அரசயலில் இலங்கைத் தமிழர்கள் தலையிடக்கூடாது” என்று கூறியிருப்பது அமீரின் ஆளுமைக்கு அழகான செயற்பாடல்ல.
இது “எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடாதீர்கள்..” என்று ஸ்ரீலங்கா அரசு கூறிவிட்டு வகைதொகையின்றி தமிழர்களை இனப்படுகொலை செய்வதைப் போன்ற ஒற்றைப்படைத் தன்மையான கருத்தாகும்.
உலகம் இன்று பூகோளமயப்பட்டுள்ள நிலையில் உலகில் எந்த மக்களைப் பற்றியும் யாரும் கருத்துரைக்கும் விமர்சனம் செய்யும் ஆதரவு கொடுக்கும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கையில் அமரீன் கருத்து மிகவும் பிற்போக்குத்தனமானது.
தவிரவும், தமிழகத்திற்கும் – ஈழத்திற்கும் இருக்கும் தொன்று தொட்ட பந்த உறவு ஆழமானது. இரண்டு நிலங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தாய் சேய் நிலமாக தொப்புள்கொடி உறவைக் கொண்டுள்ளது.
தமிழக அரசியலில் ஈழத் தமிழர்களின் விடயம் தவிர்க்க முடியாத ஒரு பேசுபொருளாக இருக்கையில், ஈழத் தமிழர்கள் எங்களைப் பற்றி பேசக்கூடாது என்பது மிகவும் தவறான செயற்பாடு என்பதை வலியுறுத்துகிறோம்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]