A9 வீதி முற்றிலும் முடக்கம் – கொட்டும் மழையிலும் நீதி வேண்டி போராட்டம்
பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக A9 வீதியூடான போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொட்டும் மழையிலும் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் நடத்திவரும் இந்த போராட்டத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த இடத்தில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் இல்லை என செய்தியாளர் தெரிவித்தார்.
சக மாணவர்களின் படுகொலைக்கு நீதிவேண்டி A9 பிரதான வீதியில் அமர்ந்து கொண்டு பல பதாதைகளை ஏந்தியவாறும் தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்களின் குறித்த போராட்டத்தினால் A9 வீதி முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்து