ஆளுநர் ஜோன் கிரேவ்ஸ் சிம்கோவை கௌரவப்படுத்திய ஒகஸ்ட் மாதத்தின் முதல் திங்கட்கிழமை!
ஒன்ராறியோவின் துணைநிலை ஆளுநர் ஜோன் கிரேவ்ஸ் சிம்கோவை கௌரவப்படுத்துவதற்காக, ஒகஸ்ட் மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று, பெரும்பாலான அரசாங்க காரியாலயங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்து.
இவரை கௌரவப்படுத்துவதற்காக, வங்கிகள், பொது நூலகங்கள், மதுபான மற்றும் பியர் சாலைகள், தபால் விநியோகம் ஆகியனவைக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
மேலும், நவீன ரொறொன்ரோவின் பிறப்பிடமான சரித்திர பிரசித்தி பெற்ற யோர்க் கோட்டையின் கண்டுபிடிப்பாளரான சிம்கோவை கௌரவப்படுத்த இந்த விடுமுறை ஒன்ராறியோவில் மட்டும் வழங்கப்படுகின்றது.
சிம்கோ தினம் என அறியப்படும் இத்தினத்தை ஏன் விடுமுறை தினமாக அறிவித்தார்கள் என பலருக்கு தெரியாது. ஆனால் பெரும்பாலானவர்கள் பணிகளிலிருந்து வீடுகளில் தங்குவதற்கு கிடைத்த ஒரு மேலதிக நாள் என கருதுவதாக கூறப்படுகின்றது.
– See more at: http://www.canadamirror.com/canada/67154.html#sthash.bmCNSBIY.dpuf