ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ளபோதே தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே சென்றுவர முடியுமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் இந்த நடைமுறை ஏற்புடையது அல்ல என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசத்தில் திங்கட்கிழமைகளில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி இலக்கம் 1 அல்லது 2 இல் முடியும் நபர்களுக்கு மட்டும் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியளிக்கப்படும்.
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 3,4 ஆகியவைகளாக இருந்தால் செவ்வாயன்றும், 5,6 இல் முடிவடைந்தால் புதனன்றும், 7,8 இல் முடிவடைவோர் வியாழனன்றும், 9, 0 இல் முடிவடைவோர் வெள்ளியன்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.