தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கிறது கனடாவில் நடந்த ஈழம்சாவடி நிகழ்வு!
கனடாவில் ஒன்ராரியோ மாநிலத்தில் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்காலச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்தவப்படுத்தி பிரமாண்டமாய் இவ்வருடமும் அமைந்த ஈழம் சாவடி பல சிறப்புக்களை கொண்டதாக இவ்வாண்டு அமைந்தது.
ஈழம்சாவடி பெற்ற வருமானத்தில் ஒருபெரும் பகுதியை தாயக உறவுகளின் புனர்நிர்மாணப் பணிக்காக வழங்கவுள்ளதாக ஈழம்சாவடியின் அமைப்பாளர்களான பிராம்டன் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளமை கனடியத் தமிழ் மக்களுக்கு பெருமகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
இவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி கனடாவில் நிகழ்ச்சிகளை நடாத்தும் ஏனைய தமிழர்களும் தாய கஉறவுகளுக்கு கரம் கொடுக்க முன்வர வேண்டும் என்ற வேண்டுதலை மக்கள் பலரும் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை அதிஸ்ட லாபச்சீட்டு ஒன்றை நடாத்தி அதில் பெறப்பட்ட பணத்தை பிராம்டனில் உள்ள ஒரே ஒரு வைத்தியசாலையின் அபிவிருத்திப்பணிக்கு வழங்கி ஒரு முன்மாதிரியான சமூகமாக தமிழர் சமூகத்தை தமது பிராம்டன் நகரில் மிளிர வைத்துள்ளனர்
.
கலைநிகழ்வுகளினூடாக இளையவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது மட்டுமன்றி அவர்களை கௌரவிக்கவும் தவறவில்லை. வளரும் கலைஞர் சுப்பர் சிங்கர் புகழ் நிருஞன் அம்பிகா நகைமாடத்தினால் தங்கப்பதக்கம் வழங்கி ஈழம்சாவடி நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.
தமிழர் தாயக வரலாற்றை சித்தரிக்கும் பல நிகழ்வுகள் இம்முறை ஏனைய சமூகங்களுக்கு வரலாற்றுபாடமாக நிகழ்த்தப்பட்டன. தமிழர் இனவழிப்பு விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. அவ்வாறான ஒரு நிகழ்வைப் பார்த்துவிட்டு முக்கிய பெண்மணி ஒருவர் தனது ருவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு செய்தி பரிமாறியிருந்தார்.
@Carabram: Eelam tells the story of the tamil genocide through dance at #carabram2016
உணவுச்சாவடிகள், மலிவுவிலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம்சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக அமைந்தது.
வெள்ளி மற்றும் சனி மாலை இறுதி நிகழ்வாக அரவிந்தனின் மெகாரியூனர்ஸ் இன்னிசை நிகழ்வும் ஞாயிறு மாலை இறுதி நிகழ்வாக பாரதி கலைக்கூடத்தின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறறன.
பிராம்டனில் Sandalwood Pkwy / Dixie Road சந்திப்புக்கு அருகாமையில் 1495 Sandalwood Pkwy East இல் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்ட அரங்கில் ஈழம் சாவடி அமைந்தது.
ஈழம்சாவடிக்கு அமைச்சர்கள், மத்திய, மாநில மற்றும் நகரப் பிரதிநிதிகள் பலரும் வருகைதந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரனை வழங்கியது. உங்களுடைய படைப்புகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் [email protected] மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.