ஐபோனை வீழ்த்தியது சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ்
ஐபோன் எஸ்இ-யை சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் ஆகிய கைபேசிகள் விற்பனையில் வீழ்த்தியுள்ளது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தை விட வியாபாரத்தில் முன்னணியில் உள்ளது என சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ITC) தெரிவித்துள்ளது.
ITC நடத்திய ஆய்வில் சாம்சங் நிறுவனம் கடந்த காலாண்டில் 5.5 வீதம் கடந்த ஆண்டை விட அதிகமாக விற்பனை செய்துள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனமோ ஐபோன் விற்பனையில் 15 வீதம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் இந்த முன்னிலைக்கு காரணம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட மேம்படுத்தப்பட்ட செயலிகளும், வாட்டர் ஃப்ரூபுடன் அறிமுகப்படுத்தபட்ட கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன்களும் தான் என ITC தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது மலிவு விலை ஐபோன் எஸ்இ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய போதிலும் அதனால் முன்னிலைக்கு வர முடியவில்லை.
மேலும், ITC ஆய்வில் சீனாவின் huawai 3வது இடமும், oppo 4வது இடமும் மற்றும் vivo 5வது இடமும் பெற்றுள்ளன.