கடலில் நீந்தி கிரேக்கம் சென்ற அகதி ரியோ ஒலிம்பிக்கில்!
பிரேசிலில் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அகதிகள் அணியில் சாதிக்கும் நோக்குடன் மற்றுமொரு அகதி பெண் தயாராகியுள்ளார்.
யஸ்ரா மர்தினி என்ற 18 வயதான குறித்த யுவதி சிரியா நாட்டை சேர்ந்தவர். உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக துருக்கியிலிருந்து ஐரோப்பா நோக்கி பயணித்தார்.
குறித்த யுவதி உள்ளிட்டவர்கள் பயணித்த படகு இடைநடுவே பழுதாகியுள்ளது. இதனால் யஸ்ரா மர்தினி மற்றும் அவரின் சகோதரியும் கிரேக்கத்தை நோக்கி நீச்சலடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த யஸ்ரா மர்தினி, நீங்கள் நீருக்குள் இருக்கும் போது எதைபற்றியும் நினைப்பதில்லை.
ஆனால், நீருக்குள் இருக்கும் போது எனது உலகமே வேறு. சில நேரங்களில் தண்ணீர் குளிரும் அதை சூடேற்ற எதுவும் இருக்கவில்லை.
குண்டு வெடிப்பு, பாதுகாப்பு போதாமை போன்ற சூழலில் வாழ்ந்து வந்தோம். நாங்கள் வந்த படகு சரியில்லை என நினைக்கின்றேன்.
இடைநடுவில் இயந்திரம் செயற்படாமல் போனது. ஒருவர் கடலில் குதித்தால் தான் தொடர்ந்தும் பயணிக்கலாம் என கூறினார்கள்.
உடனே என் சகோதரி கடலில் குதித்தால். நான் கடலில் குதிக்க அவள் அனுமதிக்கவில்லை. எனினும் மறுபுறத்தில் நானும் கடலில் குதித்தேன்.
வழியில் நாம் உயிரிழக்கலாம் என்ற பயம் இருந்தது. என் சொந்த நாட்டில் கிட்டத்தட்ட நான் இறந்து விட்டதாகவே நான் கருதினேன்.
எவ்வாறாயினும், நீச்சல் பயிற்சி பெற்ற நாங்கள் நீரில் இறப்பது அவமானமல்லவா என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.