லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‛மாஸ்டர்’. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆண்டரியா, சாந்தனு பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் வேகமாக நடத்தப்பட்டது. பின், கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடத்தப்பட்டது. தற்போது, மீண்டும் சென்னையில் படபிடிப்பு நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் படத்தின் படபிடிப்பை முடிக்கவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் கேரக்டர் பெயர்கள் வெளியாகி இருக்கின்றன. விஜய் கேரக்டருக்கு ஜேம்ஸ் துரைராஜ் என்றும், விஜய் சேதுபதி கேரக்டருக்கு பவானி என்றும் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.