விபரீதத்தில் முடிந்த ‘Pokemon Go’ விளையாட்டு !
கனடா-அல்பேர்ட்டாவை சேர்ந்த இளம் வாலிபர்கள் இருவர் ‘Pokemon Go’ விளையாட்டை விளையாடிய வண்ணம் எதிர்பாராத வண்ணம் யு.எஸ்.எல்லையை கடந்து மொன்ரானாவிற்குள் சென்றுவிட்டனர்.இருவரையும் யு.எஸ். எல்லை ரோந்து அதிகாரிகள் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.
வாலிபர்கள் இருவரும் விளையாட்டில் மூழ்கி யு.எஸ்சிற்குள் அலைந்து திரிந்ததாக எல்லை ரோந்து அதிகாரி ஜோன் சவுத் கூறியுள்ளார்.
இவர்களின் தாயார் எல்லைக்கு அருகாமையில் கனடா பகுதியில் நின்றுள்ளார். தாயாருடன் தொடர்பு கொண்ட அதிகாரி இருவரையும் விடுவித்து தாயாரிடம் ஒப்படைத்தார்.
இவர்களின் பெயர் வயது விபரங்கள் இவர்கள் கடந்தது எத்தகைய நிலப்பரப்பு போன்ற விபரங்களை அதிகாரி வெளியிட மறுத்து விட்டார்.
வியாழக்கிழம மொன்ரானா சுவீட் கிராஸ் அருகில் இவர்கள் கைதானதாகவும் இப்பகுதி அல்பேர்ட்டா மாகாணத்தில் கனடிய எல்லை ரவுனான ஊழரவவள எல்லையாகும்.
‘Pokemon Go’ விளையாடுபவர்கள் தங்களது செல் போன்களில் மெய்நிகர் பாத்திரங்களை கண்டறிய வெவ்வேறு இடங்களிற்கு செல்வர்.
உலகைக் கலக்கும் Pokemon Go? அந்தரிக்கும் உலகமும், அபாயத்தில் சிக்கும் மக்களும்!!