போலி இலத்திரனியல் பயண அனுமதிகளை விற்பனை செய்யும் இணையத்தளங்கள் : அரசு அதிருப்தி
போலி இலத்திரனியல் பயண அனுமதிகளை (eTA – Electronic Travek Authorization) விற்பனை செய்யும் இணையத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து கனேடிய அரசு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இம்மோசடி மூலம் இலத்திரனியல் பயண அனுமதிகள் அவற்றின் வழமையான பெறுமதியைவிட 17 மடங்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவினுள் பிரவேசிக்கும் சகல வெளிநாட்டினர்க்கும் இலத்திரனியல் பயண அனுமதிகள் விரைவில் கட்டாயமாக்கப்படள்ள நிலையில், இவ்வாறு போலியான இலத்திரனியல் பயண அனுமதிகளை விற்பனை செய்யும் இணையத்தளங்கள் குறைந்தது 10 உள்ளதாக கனேடிய குடிவரவு அமைச்சின் பேச்சாளர் Nancy Chan தெரிவித்துள்ளார்.
கனேடிய டொலர் 7 மட்டுமே செலுத்திப் பெற்றுக்கொள்ளக் கூடிய இந்த இலத்திரனியல் பயண அனுமதிகளை ( சில மோசடியாளர்கள் 85 Euro இதற்கு இணையமூலம் விற்பனை செய்துள்ளார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக குடிவரவுத்திணக்களம் இதுவரை 500 பேரிடமிருந்து முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. இவற்றுள் சிலர், தாம் கனேடிய அரசுடனேயே கொடுக்கல்-வாங்கலில் ஈடுபடுவதாக எண்ணிக்கொண்டு அதிக விலையைக் கொடுத்துள்ளனர்,
மேலும் சிலர் சந்தேகத்திற்கிடமானவை என அவர்கள் நம்பும் இணையத்தளங்களின் செயற்பாடுகளைத் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர் எனவும் அவர்; தெரிவித்தார்.
– See more at: http://www.canadamirror.com/canada/66465.html#sthash.1Mmkc0mk.dpuf