பசிலின் யோசனையால் ராஜபக்க்ஷ அணிக்குள் பிளவு!
பசில் ராஜபக்சவின் யோசனைக்கு அமைய ராஜபக்ச அணியினர் ஏற்பாடு செய்துள்ள கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய பாத யாத்திரை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள ராஜபக்க்ஷ அணியினறுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ராஜபக்க்ஷ அணியில் இருந்த போதிலும் எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்களையும் எதிர்நோக்காத விதுர விக்ரமநாயக்க மற்றும் இரத்தினபுரி அணியினர் இந்த பாத யாத்திரைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும், அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை செல்வதற்கு இது ஏதுவான காலம் அல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடமே கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் இறுதிக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய இப்படியான எதிர்ப்பு போராட்ட ஆயுதத்தை முன்கூட்டியே பயன்படுத்துவது அதன் கூர்மை இல்லாமல் போய்விடும் எனவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அனைவரும் வேண்டாம் எனக் கூறிய போது, பசில் ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டது போல், இதுவும் பசிலின் முட்டாள்தனமான ஆலோசனையாகும்.
இறுதிக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய எதிர்ப்பு போராட்டத்தை முன்கூட்டியே நடத்துவதன் காரணமாக அதன் பெறுமதி குறைந்து போகும் என்பது மேற்படி அணியினரின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
அன்று பசிலின் ஆலோசனையை கேட்காமல் இருந்திருந்தால், இன்றும் ராஜபக்க்ஷ அரசாங்கமே ஆட்சியில் இருக்கும்.
திருடியவர்களுக்கு உள்ள அவசரம் திருடாத தமக்கு இல்லை எனவும் தாம் ராஜபக்க்ஷ அணியில் இருந்தாலும் தம் மீது திருட்டு குற்றம் சுமத்தப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள ராஜபக்க்ஷ அணியினர் மேலும் தெரிவித்துள்ளனர்.