குவாத்தமாலா சிறையில் மொடலும் பலி!!
குவாத்தமாலாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற வன்முறையில் 12 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி ஒருவரும் இச் சம்பவத்தில் பலியானார்.
ஜோனா பைரியெல்
ஜோனா பைரியெல் எனும் இந்த மொடல், சிறையிலுள்ள கைதி யான முன்னாள் இராணுவ வீரர் பிறையன் லீமாவை பார்வையிடச் சென்றபோதே மோதலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குவாத்தமாலாவின் தலைநகர் குவாத்தமாலா சிற்றி நகரில் கடந்த திங்கட் கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குவாத்தமாலா முன்னாள் இராணுவ அதிகாரியான பிறையன் லீமா ஒலி வியாவை இலக்கு வைத்தே இந்த மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப் படுகிறது.
இந்த மோதல்களில் பிறையன் லீமா ஒலிவியா வும் கொல்லப்பட்டார்.
குவாத்தமாலாவைச் சேர்ந்த ஆயரான ஜூவான் ஜெரா ர்டியை 1998 ஆம் ஆண்டு கொலை செய்த குற்றத் துக்காக இராணுவ அதிகாரி பிறையன் லீமா ஒலிவியா வுக்கு 20 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் குவாத்தமாலா சிற்றியிலுள்ள ‘பவோன்’ சிறைச்சாலை யில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறைச்சாலையிலும் அச்சுறுத் தல், கப்பங்கள் மூலம் தனது சொந்த சாம்ராஜ்யம் ஒன்றை நிறுவி யிருந்தாராம் லீமா.
அச் சிறையில் கைதிகளாகவுள்ள இரு வேறு குழுக்களுக்கிடை யிலான பகைமையே கடந்த திங்கிட்கிழமை பாரிய வன்முறையாக வெடித்தது.
சிறைக் காவலர்கள்
பிறையன் லீமா மீது கைதிகள் சிலர் கிரனேற் ஒன்றை வீசியதை யடுத்து அவருக்கு ஆதரவான தரப்பினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதிகளின் ஒரு குழுவுக்கு பிறையன் லீமா தலைமை தாங்கிய தாகவும் மற்றொரு குழுவுக்கு போதைப் பொருள் கடத்தல்காரரான மார்வின் மொரின் என்பவர் தலைமை தாங்கியதாகவும் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி மோதல்களில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் கைதி களாவர். பிறையன் லீமாவை பார்வையிடுவதற்காக சிறைச்சாலைக்குச் சென்றிருந்த ஆர்ஜென்டீன மொடலான ஜோனா பைரியெலும் இந்த கலவரத்தில் அகப்பட்டு உயிரிழந்தார்.
பிறையன் லீமாவின் சகோதரர் லூயிஸ் அல்பேர்ட்டோ லீமா இது தொடர்பாக கூறுகையில், ஜோனா பைரியெல் தனது ஆர்ஜென்டீன காதலருடன் குவாத்த மாலாவுக்கு வந்தனர்.
கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
பின்னர் அந்த ஜோடியினர் பிரிந்தனர். ஜோனா பைரியெல் உயிரியல் சுகாதார பூங்கா நிறுவனம் ஒன்று தொடர்பில் எமக்கு ஓர் ஆலோசகராக பணி யாற்றினார்’ எனத் தெரிவித்தார்.
ஜோனா எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. ஆனால், கொல்லப்பட்டவர்களில் நால்வர் தலை துண்டிக்கப்பட்டு இறந்தனர் என செய்தி வெளியாகியுள்ளது.