கனேடியர்களுக்கான விசாமுடிவை தாமதப்படுத்தும் ஐயம்!ரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்குள் பிரவேசிக்க கனேடியர்கள் எதிர்நோக்கும் விசா கட்டுப்பாடு முடிவை, ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தாமதித்து வருவதாக கனடா குற்றஞ்சுமத்தியுள்ளது.
கனேடியர்களிற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்குள் பிரவேசிக்க விசா தேவைப்படாதது போல, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகளிற்கும் கனடாவிற்குள் பிரவேசிக்க விசா தேவைப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
இது தொடர்பாக ஆராய்வதற்காகக் குடிவரவு அமைச்சின் அதிகாரிகள் கடந்த மாதம் ரோமானியா நாட்டிற்கு விஜயம் செய்தனர். இந்நிலையில், அவர்கள் இம்மாதம், பல்கேரியா நாட்டிற்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
எதிர்வரும் இலையுதிர்காலத்தில் நடைபெறவுள்ள கனடா- ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின்போது, ரோமானியா, பல்கேரியா ஆகிய நாடுகளிற்கான விசா கட்டுப்பாடு தொடர்பாக மேலும் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.