குத்துச்சண்டை சாம்பியன் விஜேந்தர் சிங்கிற்கு எதிராக வழக்கு பதிவு: ஏதற்காக தெரியுமா?
ஆசிய பசிபிக் தொழில்முறை குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் விஜேந்தர் சிங்கிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த தொழில்முறை குத்துச்சண்டையில் இந்தியாவின் விஜேந்தர்சிங், அவுஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை வீழ்த்தி ஆசிய பசிபிக் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த போட்டியின் போது விஜேந்தர் சிங் இந்திய தேசியக் கொடியை அவமதித்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வசுந்தரா என்கிளேவ் பகுதியை சேர்ந்த Ullhas என்பவரே விஜேந்தருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், ஆசிய பசிபிக் குத்துச் சண்டை போட்டியின் போது விஜேந்தர் சிங் இந்தியாவின் மூவர்ணக் கொடி நிறத்தில் ஷார்ட்ஸ் அணிந்து இருந்ததாகவும்.
இதன் மூலம் அவர் இந்திய கொடி விதியை மீறியுள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற கொடி விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆலோசனை படியே புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.