ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள ஏனைய கூட்டுக் கட்சிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இவ்வாரத்துக்குள் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பில் தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் இந்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.