ஆப்கானிஸ்தானில் தாலிபனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை காலாவதியாகி விட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தாலிபன்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். தம்மைப் பொருத்தவரை அமைதிப்பேச்சு முடிந்துபோன விஷயம் என்று வெள்ளை மாளிகையில் அறிவித்த டிரம்ப், 18 ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஆப்கான் படைகளுக்கும் தாலிபன்களுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டார்.
ஆப்கான் அதிபர் மற்றும் தாலிபன் தலைவர்களை தனித்தனியாக ரகசியமாக கேம்ப் டேவிட் தீவுக்கு டிரம்ப் அழைத்திருந்த வேளையில் தாலிபன்கள் நடத்திய வன்முறையால் அந்தப் பேச்சுவார்த்தையை ரத்து செய்த அதிபர் டிரம்ப் தொடர்ந்து அமைதி முயற்சிகள் உயிரற்றுப் போய்விட்டதாகத் தெரிவித்துள்ளார்.