ஐநா வழிகாட்டுதல் மற்றும் இருதரப்பு உடன்படிக்கை அடிப்படையில்தான் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று பாகிஸ்தானிடம் சீனா அறிவுறுத்தியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக இஸ்லாமாபாத் சென்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்த விவரங்கள் பின்னர் அறிக்கையாக வெளியிடப்பட்டன. அதன்படி, இந்தியா-பாகிஸ்தானிடையே நிலவும் சூழலை மேலும் சிக்கலாக்க கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஆதரிக்க முடியாது என்று சீனா மறுத்துவிட்டது.
அதே நேரத்தில் பாகிஸ்தானின் இறையாண்மை, ஒருமைப்பாடு, சுதந்திரம் மற்றும் தேசிய கண்ணியத்தை பாதுகாக்க சீனா ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.