இங்கிலாந்தில் மெட்ரோ ரயிலில் சென்ற பயணி ஒருவர் துணியைத் துவைத்து பிழிந்து காயவைத்த சம்பவம் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனில் ஓடும் மெட்ரோ ரயில் ஒன்றில் ஏராளமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் சாவகாசமாக துணியை எடுத்து, தான் கொண்டு வந்திருந்த பாட்டில் நீரை ஊற்றி சோப்புப் பொடி கலந்து துணியைத் துவைத்து கசக்கிப் பிழிகிறார். இதனை அருகில் அமர்ந்திருந்த மற்ற பயணிகள் ஆச்சரியத்துன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதைப் பற்றி துளியும் கவலைப்படாத அந்த நபர் தான் கையோடு எடுத்து வந்திருந்த கம்பியை விரித்து துணிகளைக் காயப்போட்டு பின்னர் அமைதியாக அமர்ந்து கொண்டார். அந்த நபரின் இந்தச் செய்கை மற்றவர்களிடம் நகைப்பை ஏற்படுத்தியது.