உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் மொட்டு சின்னத்திலேயே ஸ்ரீ ல ங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியதாகவும், இதனால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அச்சின்னத்தை மாற்றவேண்டிய எந்தவொரு தேவையும் இல்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என்பது போல் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான சின்னமும் மொட்டு சின்னம் ஆகும் எனவும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.
மொட்டு சின்னம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
தேர்தலில் வெற்றி பெறவேண்டுமாயின் பிரபல்யமான வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது அவசியம் என்பது போல் கட்சியின் சின்னமும் முக்கியமானது எனவும் ரோஹித்த எம்.பி. சுட்டிக்காட்டினார்.