ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிடிவாதமாகவுள்ளவர்கள் ஒழுக்கத்துடன் இருக்கின்றனரா? என்பது தொடர்பில் சிக்கல் நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலரும் அதிருப்தியில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் அவர்கள் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.