புத்தளம் – வண்ணாத்திவில்லு – புபுதுகம பகுதியிலுள்ள காணி ஒன்றில் இருந்து பெருந்தொகையான மருத்துவக் கழிவுப் பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவக் கழிவுப் பொருட்கள் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கடந்த காலத்தில் வண்ணாத்தவில்லு பகுதியில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட லெக்டோ தோட்டப்பகுதிக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்தே, இந்த மருத்துவக் கழிவுத்தொகை அடையாளம் தெரியாத சிலரால் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மருத்துவக் கழிவுத் தொகையில், பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி மற்றும் பயன்படுத்தப்படாத சிறிய மருந்து போத்தல்கள் உள்ளிட்ட வேறு சில பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரதேச செயலக சுகாதார அதிகாரி மற்றும் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.