சிலி நாட்டில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5.1-ஆக பதிவாகியுள்ளது.
சிலி நாட்டின் ஆரிகா நகரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.32 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை உணர்ந்து வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் , நிலநடுக்கம் தொடர்ந்ததாக தெரிவித்தனர். சில இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. பொருட்கள் மேல விழுந்ததில் சில பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால், மக்கள் பீதி அடைந்தனர். இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது; இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.