இந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்ப்பதற்காக சீனக் கப்பலொன்று அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் கடற்பரப்பில் புகுந்த அந்தக் கப்பல் அங்கேயே சில தினங்கள் தங்கியிருந்து உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அந்தமான்- நிகோபார் தீவுகளின் அருகே காணப்படுகின்ற இந்திய கடற்படையின் தளத்தை உளவுபார்க்க குறித்த கப்பல் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய உளவுத்துறையினர் மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
சீனாவின் அதிநவீன உளவு கப்பல் இந்திய கடல்பகுதியில் ஊடுருவியிருப்பது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.