ஒரு தனிப்பட்ட குடும்பம் தேனீர் அருந்திக் கொண்டு நாட்டின் கொள்கையை தீர்மானிப்பதை விடவும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புத்திஜீவிகள் பலரும் இருந்து தீர்மானம் ஒன்றுக்கு வருவது சிறந்தது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அக்கட்சிக்குள் நெருக்கடி நிலைமை இல்லை. கடந்த 31 ஆம் திகதி வேட்பாளர் குறித்து அறிவிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கூறியிருந்தார். இருப்பினும், அதனை அறிவிப்பதற்கு இன்னும் காலம் தேவையாக உள்ளதாக அவர் பின்னர் அறிவித்துள்ளார்.
அடுத்த வாரத்துக்குள் வேட்பாளர் குறித்து தீர்வொன்றை அக்கட்சி முன்வைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.