ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நம்பிக்கை வைத்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டுமாக இருந்தால், அக்கட்சியின் உறுப்புரிமையைப் பெற்ற எஸ்.பீ. திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் இராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களான இவர்கள் இருவரையும் பொதுஜன பெரமுன கட்சியில் இணைத்துக் கொண்டமை, இரு கட்சிகளிடையே முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தையை இடைநிறுத்துவதற்கான ஒரு சதியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எஸ்.பீ. திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோரின் உறுப்புரிமை நீக்கம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.