சஜித் வந்தாலும், ரணில், கரு ஜயசூரிய ஆகியோரில் யார் வந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கும் ஆகக் குறைந்த வாக்குகளாக வரலாற்றில் பதிவாகும் என்பது நிச்சயம் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ளதாக காட்டுவதற்கு முயற்சிக்கும் நெருக்கடி நிலைமை, மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு நாடகமே ஆகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.