நடிகர் வைபவ் நடிப்பில், நேற்று, சிக்ஸர் படம் வெளியானது. இதில், வைபவுக்கு ஜோடியாக பல்லக் என்ற நடிகை நடித்துள்ளார்.
படத்தில் இவர்களைத் தவிர, காமெடியன்களாக சதிஷ், என்னமா ராமர், கலக்கப் போவது யாரு குரேஷி, பாலா ஆகியோரும் நடித்துள்ளனர். படம், நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
காமெடி காட்சிகள் நிறைந்துள்ள இப்படத்தை, இளம் நடிகை அதுல்யா பார்த்து படம் குறித்து கருத்துக் கூறியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது:
சிக்சர் படம் முழுக்க காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. எல்லோரையும் சிரிக்க வைக்க படக் குழு முயற்சித்திருக்கிறது. நடிகர் வைபவ்வின் நடிப்பைப் பாரட்டலாம். மன அழுத்தம் போக்கும் ஒரு படமாக சிக்ஸர் அமைந்திருக்கிறது. படத்தை தியேட்டருக்கு வந்து பார்க்கும்போதுதான், முழுமையான பீல் கிடைப்பதை உணர முடியும்.
இவ்வாறு அதுல்யா கூறியிருக்கிறார்.