தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி ஆகிய படங்களில் நடித்தவர் ரெஜினா.
இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
நான் நடிக்க வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. எந்த மாதிரி கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன். இப்போது, சினிமாவில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு இருக்கிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் என்னை பற்றித்தான் ஆராய்ச்சி செய்கிறேன். தற்போதைய நிலையில், தமிழில் படம் ஒன்றிலும், தெலுங்கு படமொன்றிலும் நடித்து இருக்கிறேன். கதைக்கு தேவை என்றால், எந்த மாதிரி கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ரெஜினா கூறியிருக்கிறார்.