விதார்த் நடிக்கும் புதிய படத்தை சக்தி சவுந்தர்ராஜன் உதவியாளர் மனோஜ் ராம் இயக்குகிறார். விதார்த்துடன் லட்சுமிப்ரியா, நெடுநல்வாடை அஞ்சலி நாயர், ஆடுகளம் நரேன், செண்ட்ராயன், சந்தோஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். பரத் ராகவன் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார், என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விதார்த் துப்பறிவாளனாக நடிக்கிறார். படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. படம் பற்றி இயக்குனர் மனோஜ் ராம் கூறியதாவது:
இப்படத்தை மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாக்க உள்ளோம். இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நீங்கள் எதிர்பார்க்காத நிறைய திருப்பங்களும் விறுவிறுப்புடன் கூடியதாக அமைந்திருக்கும். சம காலத்தில் உள்ள மிக முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தின் கரு உருவாக்கப் பட்டுள்ளது.
விதார்த் தொடர்ந்து கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து கதையின் நாயகனாக விளங்குகிறார். இப்படத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்துவார். எங்களை மாதிரி புதுமுக இயக்குனர்களுக்கு அவர் ஒரு வரப்பிரசாதம். இப்படத்தின் திரைக்கதை முடித்ததும் இந்த கதாப்பாத்திரத்தில் இயல்பாக நடிப்பதற்கு அவரால் மட்டுமே முடியும் என்று எனக்கு தோன்றியது.
வித்தார்த்தின் நண்பனாக சென்ட்ராயன் நடிக்கிறார். விதார்த் மனைவியாக , நெடுநல்வாடை படப்புகழ் அஞ்சலி நாயர் நடிக்கிறார். படப்பிடிப்பை முழுக்க முழுக்க சென்னையில் நடத்த உள்ளோம் என்றார்.