ஆசிய பசிபிக் தொழில்முறை குத்துச் சண்டை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் விஜேந்தர் சிங்
தொழில்முறை குத்துச்சண்டையில் இந்தியாவின் விஜேந்தர்சிங், அவுஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை வீழ்த்தி ஆசிய பசிபிக் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்தியாவின் விஜேந்தர் சிங் கலந்து கொண்ட ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்துக்கான தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில், விஜேந்தர் சிங் (30 வயது, 75.7 கிலோ) – அவுஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை (34 வயது, 74.9 கிலோ) எதிர்கொண்டார்.
டெல்லி தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி மொத்தம் 10 சுற்றுகளைக் கொண்டதாகும்.
10 சுற்றுகளைக் கொண்ட போட்டியில் விஜேந்தர் பங்கேற்பது இதுவே முதல்முறை.
தொழில்முறை குத்துச்சண்டையில் முதல்முறையாக சொந்த ஊரில் கோதாவில் இறங்கிய விஜேந்தர்சிங்கின் ஆட்டத்தை காண காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா, கிரிக்கெட் வீரர்கள் ஷேவாக், யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் என்று ஏராளமான பிரபலங்கள் குவிந்திருந்தனர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹெர்ரி கோப்பை வீழ்த்தி சாம்பியம் பட்டம் வென்றார். விஜேந்தர்சிங் 98-92, 98-92, 100-90 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொழில்முறை போட்டியில் 7-வது முறையாக விஜேந்தர்சிங் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.