ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய வீரர் ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கம்!
கடந்த ஏப்ரல் மாதத்தில் அல்ஜீரியாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதனாலே இவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த மாதம் ரியோ டி ஜெனீரோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான அவுஸ்திரேலிய மல்யுத்த அணியில் 66 கிலோ பிரிவில் இடம் பெற்று இருந்தார்.
இந்நிலையில் ஒலிம்பிக் அணியில் வினோத்குமாரை நீக்கும்படி அவுஸ்திரேலிய மல்யுத்த சம்மேளனத்தை அந்த நாட்டு ஒலிம்பிக் கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் வினோத்குமார் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்து அவர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த வினோத் குமார், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார்.