புனித ஹஜ் பயணத்திற்கு வருபவர்களின் நேரத்தைக் குறைக்கும் வகையில் அதிவேக ரயில்களை சவுதி அரசு இயக்கி வருகிறது. நடப்பாண்டு புனித ஹஜ் பயணம் நேற்று முதல் தொடங்கியது.
இதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதிக்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் மெக்கா, மதினா, ஜெட்டா உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் வகையில் புதிய அதிவேக ரயிலை சவுதி இயக்கி வருகிறது.
மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில் கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் நடப்பாண்டு முதல்தான் பயன்பாட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. சாலை மார்க்கமாக 10 மணி நேரம் செல்லும் புனித யாத்ரீகர்கள் இனி சில மணி நேரங்களில் முக்கிய நகரங்களை அடைய முடியும்.