குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவார் அணையின் மொத்தமுள்ள 30 மதகுகளில் 26 மதகுகள் திறந்துவிடப்பட்டன.
இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முதலமைச்சர் விஜய் ரூபானி தமது சக அமைச்சர்களுடன் அணைப்பகுதியை பார்வையிட்டார். அணையின் மதகுகள் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பெருமளவில் நீர் திறக்கப்படுகிறது. மதகுகள் கட்டுவதற்கு முன்பு அணையின் மொத்த கொள்ளளவு 121 புள்ளி 92 அடியாக இருந்தது.
பின்னர் அது 138 புள்ளி 78 அடியாக உயர்த்தப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக நர்மதா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் நீர் மட்டம் அதன் மொத்த கொள்ளளவை விரைவில் எட்டிவிடும் நிலையில் இருப்பதால் படிப்படியாக 26 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணக்குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.