அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வந்தது. இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் இரட்டை வரி விதிப்பு வதிக்கப்பட்டது.
தொடர்ந்து சீனாவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியது. இரு நாடுகளின் வர்த்தகப் போர் உலக பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து இரு நாடுகளும் வரும் செப்டம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தனது நாணய மதிப்பை சீனா குறைத்தது. இதையடுத்து சீனாவை நாணய மதிப்பைத் திரிக்கும் நாடு என அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.