இத்தாலியின் வரலாற்று புகழ்மிக்க சின்னமான ‘ஸ்பானிஷ் படிகளில்‘ அமர்ந்தால், 31 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.
பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சிறப்பான கட்டிடங்களை கொண்டது ரோம் நகரம். இந்த நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் அந்நாட்டு அரசு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி 1725ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தாலோ, அங்கு உணவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டினாலோ அதிகபட்சமாக 400 யூரோ, அதாவது இந்தியா மதிப்பில் சுமார் 31 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அதன் 174 படிகளில் யாரும் அமராமல் இருக்க காவல்துறையினரை கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அரசின் இந்த புதிய நடைமுறைக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், சுற்றுலா வரும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது.