ஸ்காட்லாந்து கடலில், அகன்ற வாய் கொண்ட பாஸ்கிங் சுறா நடமாட்டத்தை நீர் மூழ்கி ரோபோ ஒன்று முதல்முறையாக கண்டுபிடித்துள்ளது.
உலகின் மிக இரண்டாவது பெரிய சுறா வகையான பாஸ்கிங் சுறா இங்கிலாந்து கடல் பரப்பில் வாழ்கின்றன. சுமார் 9 மீட்டர் நீளம் வரை வளரும் இந்த சுறாக்கள், ஸ்காட்லாந்து கடலில் அரிதாகவே தென்படுகின்றன.
இந்நிலையில், இந்த பாஸ்கிங் சுறாக்களை பற்றி அறியவும், அவற்றின் நடமாட்டத்தை தெரிந்து கொள்ளவும், ஆராய்ச்சியாளர்கள் மஞ்சள் நிற ரேமஸ் ஷார்க்கேம் ரோபோ ஒன்றை அனுப்பினர்.
பல்வேறு கோணங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்ட இந்த ரோபாவனது, அண்மையில் பாஸ்கிங் சுறாக்களை அடையாளம் கண்டு அதுபற்றிய காட்சிகளை பதிவு செய்தது.
மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத இந்த வகை சுறாக்கள், சிறிய கடலியிரிகளை உண்டு, கடல் அடிப்பரப்பில் பெருமளவு நேரத்தை கழித்து வருவதை ரோபா கண்டறிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.