கனடா-கல்கரி மிரள் திரளோட்டத்தில் ட்ரூடோ பிரதமராக முதல் விஜயம்.
ஜஸ்ரின் ட்ரூடோ கல்கரியில் வருடம் தோறும் இடம்பெறும் மிரள்திரளோட்டத்திற்கு புதியவரல்ல. ஆனால் இன்றய விஜயம் கனடிய பிரதமராக இவர் கலந்து கொள்ளும் முதல் விஜயமாகும்.
ட்ருடோவின் இன்றய விஜயம் இவர் காலை உணவில் கலந்து கொள்வதிலிருந்து அட்டகாசமாக ஆரம்பிக்கின்றது. பிற்பகல் கட்டுக்கடங்கா மிருகங்களில் சவாரி செய்யும் நிகழ்விலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
கல்கரியில் வருடந்தோறும் இடம்பெறும் இந்நிகழ்வில் சிறுவனாக இருந்த போதே ட்ரூடோ கலந்து கொண்டார்.இவரது தந்தையும் முன்னாள் பிரதம மந்திரியுமான Pierre Trudeau அணிவகுப்பு மார்ஷலாக 1971-லும் ஜஸ்ரின் பிறப்பதற்கு சில மாதங்களிற்கு முன்னராக 1978-லும் கடமையாற்றினார்.
ட்ரூடோ அல்பேர்ட்டா முதல்வர் றேச்சல் நோட்லியுடன் இணைந்து தென்மேற்கு கல்கரியின் ரிங் சாலை நிதி ஒதுக்கீடு குறித்த அறிவித்தலை செய்யவுள்ளார்.
இந்த மல்ரிபில்லியன்-டொலர் திட்டம் கல்கரி மற்றும் முதல் குடியினரிடம் அதிக, நீண்ட-கால சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
– See more at: http://www.canadamirror.com/canada/65958.html#sthash.ayKxfere.dpuf