பார்த்திபன் உதவியாளர் கிரண் மோகன் இயக்கும் படம் பிரம்மபுரி. புதுமுகம் வர்கீஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஜெர்மன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி மார்ஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் மிதுனா, ராம்சுபின் ஜோஸ், பவானியம்மா, கவுதம் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராகேஷ் வாலி ஒளிப்பதிவு செய்கிறார். மிக்கு காவில் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் கிரண் குமார் கூறியதாவது:
பல நூற்றாண்டுகளாக காணாமல் போன பிரம்மபுரி என்ற நகரத்தை பற்றி இந்த நூற்றாண்டில் ஒரு குழுவிற்கு தெரிய வருகிறது. அந்த நகரில் தான் மிகப் பெரிய வைரப்புதையல் இருப்பதாகவும் கேள்விப்பட்ட அந்த குழுவினர், அந்த நகரையும், புதையலையும் தேடி புறப்படுகின்றனர். அந்த குழுவினர் சந்திக்கும் திடுக்கிடும் சம்பவங்களும், பல அமானுஷ்யமான நிகழ்வுகளும் அவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்குகிறது.
இதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? மாண்டார்களா? என்பதை திரில்லாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறேன். அமெரிக்காவில் பெரும் பகுதி படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடக வனப் பகுதிகளிலும் படம் வளர்ந்துள்ளது என்றார்.