இங்கிலாந்தில் வசித்து வரும் தந்தை ஒருவர் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான தனது மகள்களில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற கசப்பான முடிவை எடுக்கும் சூழலை எதிர்நோக்கியிருக்கிறார்.
செனகலைச் சேர்ந்த இப்ராஹிமா எனும் 50 வயது நபரின் 2-வது மனைவிக்யாரை பிழைக்க வைப்பது? யாரை இறக்க அனுமதிப்பது கு 3 ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகள் ஒட்டிப் பிறந்தன. அந்தக் குழந்தைகளுக்கு இதயங்களும், நுரையீரல்களும் தனித் தனியே கல்லீரல், சிறுநீர்ப்பை செரிமான உறுப்புக்கள் மற்றும் 3 சிறுநீரகங்கள் இரு குழந்தைகளுக்கும் பொதுவாக உள்ளது.
மரியம் மற்றும் தெயே (Ndeye) ஆகிய இரு குழந்தைகளில் மரியத்தின் இதயம் பலவீனமாகி வருகிறது. அதன் இதயம் செயல்பாட்டை நிறுத்திவிட்டால் மற்றொரு குழந்தை தானாக இறந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை பிறந்ததும் பெல்ஜியம், ஜெர்மனி, ஜிம்பாவே, நார்வே, ஸ்வீடன் மற்றும் அமெரிக்க மருத்துவமனைகளில் முயற்சித்த இப்ராஹிம் குழந்தைகளுக்கு 7 மாதங்களாக இருந்த போதிருந்து இங்கிலாந்தின் கார்டிஃப்பில் உள்ள கிரேட் ஆர்மன்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்.
இரு மகள்களில் ஒன்றின் உயிரைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற சூழலில் யாரைப் பிழைக்க வைப்பது, என்ற கடினமான முடிவை எடுக்கும் சூழலுக்கு ஆளாகியுள்ளார்.