ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் அதிபர் அஷ்ரப் கனியின் நண்பரான அமருல்லா சாலேயின் அலுவலகத்தில் நான்கு தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
12 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடந்த போது சாலே அலுவலகத்தில் இருந்ததாகவும் அவர் உயிர் பிழைத்ததாகவும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
தாலிபனை கடுமையாக விமர்சிக்க கூடியவரான சாலே தமது கிரீன் டிரெண்ட் கட்சி அலுவலகத்தில் முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டபோது இத்தாக்குதல் நடைபெற்றது.
அவர் சட்டையில் ரத்தக்கறையுடன் காட்சியளித்தார். ஆனால் அவர் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.