ஜெர்மன் கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டியில் பெல்ஜியம் வீரரான மாக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
நடப்பு சீசனில் 11வது போட்டியாக ஹாக்கென்ஹீமில் நடைபெற்ற இப்பந்தயத்தில் முன்னணி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு கார்களை இயக்கினர். போட்டஸ், ரிக்கியார்டோ உள்ளிட்ட 6 வீரர்களின் கார்கள் பழுது ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறினர்.
ரெட்புல் அணியின் வெர்ஸ்டா சிறப்பாக காரை இயக்கி ஒரு மணி 44 நிமிடம் 31 வினாடிகளில் இலக்கை அடைந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நடப்பு சாம்பியனான ஹாமில்டன் கடுமையாகப் போராடியும் 9வது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.