1994ல் ஷங்கர் இயக்கிய படம் காதலன். பிரபுதேவா, நக்மா நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ‛‛என்னவளே, ஊர்வசி, முக்காலா…” உள்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.
ஆகஸ்ட் 10ம் தேதி, சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது காதலன் படத்தில் இடம்பெற்று ஊர்வசி பாடலின் புதிய வெர்சன், அதாவது அந்த டியூனுக்கு ரசிகர்கள் எழுதிய புதிய வரிகளைக்கொண்டு மேடையில் பாடப்போகிறாராம்.