அமெரிக்காவில், குப்பைகள் தேக்கி வைத்திருந்த குப்பைத்தொட்டியை கரடி ஒன்று தர தரவென இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காண்போரை சிரிக்க வைக்கிறது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில், இரவு ஆள்நடமாட்டம் இல்லாத நேரங்களில் கரடிகள் ஊருக்குள் நுழைந்து, குப்பை தொட்டியில் கொட்டப்படும் உணவு பதார்த்தங்களை ருசிபார்த்த செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
அந்தவகையில் அண்மையில், கொலரடோவில், உணவுக்காக சுற்றித்திரிந்த கரடி ஒன்று, லையான்ஸ் டவுனில் இருந்த மருந்தகத்தின் பின்புறம் சென்று அங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியை திறக்க முற்பட்டுள்ளது.
அதன் முயற்சி தோற்றுபோகவே, சமார்த்தியமாக யோசித்த கரடி, அதனை அப்படியே அங்கிருந்து வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வலைதளத்தில் வைரலாகி, பார்ப்போரை சிரிக்கை வைக்கிறது.