நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள அக்கியூஸ்ட் ஒன் என்கிற படத்தில், குறிப்பிட்ட சாதி குறித்து இழிவுபடுத்திப் பேசி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அப்படிப் பேசினால்தான் காமெடி வரும் என்று நடிகர் சந்தானம் மேடையில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
நையாண்டி நாயகன் சந்தானம் நடிப்பில் அக்கியூஸ்ட் ஒன் என்கிற படம் 26 ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த படத்தின் முன்னோட்ட காட்சியில் லோக்கல் பையனுக்கும், அக்ரஹாரப் பெண்ணுக்கும் காதல், காதலை நிரூபிக்க ஆம்லேட் சாப்பிடும் மாமி, மயங்கி விழும் தோப்பனார் என்பது போன்ற வசனக் காட்சிகள் இடம் பெற்றதற்காக அந்தணர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஏ ஒன் படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சந்தானம், சம்பந்தப்பட்ட சாதியின் பெயரை பகிரங்கமாக குறிப்பிட்டு, இரு நேர் எதிர் தரப்புகளை கலாய்த்தால்தான், சினிமா பார்க்க வரும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
படத்தில் நாயகியின் சாதியை குறிப்பிட்டு மேடையில் பேசிய சந்தானம், சாமர்த்தியமாக லோக்கல் பையன் என்ன சாதி என்று குறிப்பிடவில்லை..! .
சந்தானம், தனக்கு எதிராக புகார் தெரிவித்தவர்களை சீப் பப்ளிசிட்டி என்று குறிப்பிட்ட நிலையில், குறிப்பிட்ட சாதியை இழிவு படுத்தும் விதமாக படம் எடுத்து மேடையிலேயே அதை நியாயப்படுத்தி பேசி சர்ச்சையை உண்டாக்குவது என்ன மாதிரியான விளம்பர யுக்தி? என்ற கேள்வி எழுந்துள்ளது.