நல்லாட்சியில் அடுத்து கைது செய்யப்பட போவது யார்? விபரம் உள்ளே
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் வரிசை கட்டி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ முதலில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு அடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
இவர்களை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி வந்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் விசாரணைகளையும் எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை மஹிந்த ராஜபக்ஷ இன்று பார்வையிட்ட சென்றிருந்தார்.
இதன் போது மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை கைது செய்யப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்னவென ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த அவர், அடுத்தது தாமே கைது செய்யப்பட போவதாக கூறியுள்ளார். அத்துடன், டொலர்களுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு எதனைத்தான் செய்ய முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.