பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் சரிந்த பிறகு தமிழில் சரியான வில்லன் நடிகர்கள் இல்லாததால் பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறார்கள. அந்தவகையில், ரஜினியின் காலா படத்தில் நானா படேகர், 2.0 வில் அக்சய்குமார் போன்றவர்கள் நடித்த நிலையில், தற்போது ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தில் சுனில் ஷெட்டி, பிரதீப் பாபர், திலீப் தாஹித், நவாப்ஷா போன்ற நடிகர்கள் வில்லன்களாக நடித்து வருகின்றனர்.
அதேபோல் அஜித்தின் விவேகம் படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடித்தார். இப்படியான நிலையில், தற்போது இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்திலும் அபய் தியோல் என்ற பாலிவுட் நடிக்கிறார். இவருடன் சிவகார்த்திகேயன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளதாம்.