மேயாத மான் படத்தில் அறிமுகமாகி, தற்போது விஜய் உடன், பிகில் படத்தில் நடித்து வரும் இந்துஜாவின் காட்டில், அடைமழை பொழிகிறது. அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாவதால், உற்சாகமாக இருக்கிறார், அவர். துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து வந்த இவருக்கு, இப்போது, சினிமா காற்று பலமாகவே வீசுகிறது.
”குறும்படங்களுக்கும், சினிமாவுக்கும், நேரம் மட்டுமே வித்தியாசம்; மற்றபடி, இரண்டும் ஒன்று தான். ஒரே மாதிரியான உழைப்பு தான் தேவைப்படுகிறது. மற்ற மாநிலத்தவரை காட்டிலும், தமிழ் பேசுபவர்களுக்கு, தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைவு என்ற நிலை, ஏற்கனவே இருந்தது உண்மை தான். இப்போது நிலைமை மாறி விட்டது. திறமை, நடிப்புக்கேற்ற உடல்வாகு இருந்தால், நிச்சயம், நம்மைத் தேடி வாய்ப்பு வரும். மொழி பேதம் பார்ப்பது இல்லை. அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது,” என்கிறார், இந்துஜா.
”எனக்கு, நடிப்பை தவிர, பிரியாணி நன்றாக சமைக்கவும், சாப்பிடவும் தெரியும். நடனமும் நன்றாக ஆடுவேன். பிகில் படம் பற்றி, இப்போது எதுவும் கூற முடியாது,” என்கிறார், அவர்