உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க பொதுபல சேனா அமைப்பும் சந்தர்ப்பம் கோரியுள்ளது.
ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முஃதி தமது அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பிழையான கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும், அது தொடர்பில் விளக்கமளிக்கவும், முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்த பல்வேறு விபரங்கள் தங்களிடம் உள்ளதால் அந்த தகவல்களை முன்வைக்கவும் வேண்டியுள்ளதாலும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளையதினம் கூடவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் சாட்சி வழங்கவுள்ளார். அத்தோடு அமைச்சர் அப்துல் ஹாலிமின் சகோதரர் பாயிம் எம்.ஹசீமும் சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.