சக்கைப்போடு போடும் நாய் கறி விற்பனை! நாகலாந்து அரசின் அதிரடி முடிவு
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து அரசு நாய்கறி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய தீர்மானித்துள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மாட்டுக்கறிக்கு இணையாக நாய்கறியும் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.
நாய்கறியில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக கருதும் அம்மாநில மக்கள் நாய்கறியை விரும்பி உண்கின்றனர். இதனால் நாய்கறிக்கு மவுசும் அதிகமாகிவிட்டது. தற்போது அங்கு நாய்கறி கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.
இதனால் இறைச்சிக்காக வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை சிலர் திருடிச்சென்றும் விடுகின்றனர்.
இந்நிலையில் இந்த நாய்கறி விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற மாநில அரசின் மந்திரிசபை கூட்டத்தில் நாய்கறி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், நகராட்சிகளை சேர்ந்த சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது